என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆசிட் வீச்சு"
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த அடிமாலி பகுதியை சேர்ந்தவர் ஷீபா (வயது 35).
ஷீபாவுக்கும் திருவனந்தபுரத்தை அடுத்த பூஜப்புரா பகுதியை சேர்ந்த வாலிபர் அருண்குமார் என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
பலமாதங்களாக பேஸ்புக்கில் பேசிவந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். அதன்பின்பு அடிக்கடி காதலர்கள் தனிமையில் சந்தித்து பேசிவந்தனர்.
இந்த நிலையில் ஷீபா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அருண்குமாரை வற்புறுத்தினார். அப்போதுதான் ஷீபா, திருமணம் ஆனவர் என்பதும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் அருண்குமாருக்கு தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஷீபாவை சந்திப்பதை தவிர்த்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஷீபா, அருண்குமாரை சமரசம் பேச வருமாறு அடிமாலிக்கு அழைத்தார்.அவரும் நண்பர்களுடன் நேற்று அடிமாலி சென்றார்.
அடிமாலி சென்றதும் அங்குள்ள இரும்பு பாலம் அருகே அருண்குமாரும், ஷீபாவும் தனியாக சந்தித்து பேசினர். சிறிதுநேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதில் ஆத்திரம் அடைந்த ஷீபா, திடீரென மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து அருண்குமார் மீது வீசினார். இதில் அருண் குமாரின் முகத்தில் ஆசிட் பட்டு எரிந்தது. அவர் அலறிதுடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அவரது நண்பர்களும் ஓடிவந்தனர். அவர்கள் அருண்குமாரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இச்சம்பவம் பற்றி அடிமாலி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அருண்குமாரிடம் விசாரணை நடத்தினர். அருண்குமார் போலீசாரிடம் கூறும்போது, ஷீபாவுடனான தொடர்பு மற்றும் திருமணத்திற்கு மறுத்ததால் அவர் பணம் கேட்டு மிரட்டியதும், பணம் கொடுக்க மறுத்ததால் தன் மீது ஆசிட் வீசியதாகவும் கூறினார்.
இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.பின்னர் ஷீபா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
குமரி மேற்கு மாவட்டம் திருவட்டாரை அடுத்த ஏற்றக்கோடு பரையன் கோணத்து விளையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிரிஜா (வயது 36). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கிரிஜாவின் கணவர் மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். 9 ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டன் இறந்து போனார். இதனால் கிரிஜா, தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்தார்.
கிரிஜாவின் கணவர் வெளிநாட்டில் இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஜான் ரோஸ் என்பவருடன் கிரிஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போதே இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று வந்தனர்.
கணவர் இறந்த பின்பு, கிரிஜாவுக்கு, ஜான் ரோஸ் மிகவும் உதவியாக இருந்தார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் ஜான் ரோஸ் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிரிஜாவிடம் கூறினார்.
அதற்கு கிரிஜா, குழந்தைகள் இருவரும் வளர்ந்து விட்டனர். அவர்கள் பெண் குழந்தைகள் என்பதால், இனி நான் திருமணம் செய்து கொள்வது சரியாக இருக்காது. உறவினர்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறினார். திருமணத்திற்கும் மறுத்து விட்டார்.
கிரிஜா மீதான மோகத்தில் இருந்த ஜான் ரோசுக்கு அவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர் அடிக்கடி கிரிஜாவை சந்தித்து திருமண ஆசையை நிறைவேற்றும்படி தொந்தரவு கொடுத்தார். இதில் வெறுப்படைந்த கிரிஜா, சில மாதங்களுக்கு முன்பு ஜான் ரோஸ் பற்றி போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதோடு, ஜான் ரோசையும் எச்சரித்து அனுப்பினர்.
போலீசாரின் எச்சரிக்கைக்கு பிறகு சில நாட்கள் கிரிஜாவை சந்திக்காமல் இருந்த ஜான் ரோஸ் நேற்று முன்தினம் கிரிஜாவை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு குழந்தைகளும் இருந்தனர். அவர்களோடு ஜான் ரோஸ் பேசிக்கொண்டிருந்தார்.
குழந்தைகள் வெளியே சென்ற பின்பு, தனியாக இருந்த கிரிஜாவிடம் , ஜான் ரோஸ் மீண்டும் திருமண பேச்சை எடுத்தார். இதை கேட்டதும் எரிச்சலடைந்த கிரிஜா, ஜான் ரோசை திட்டியதோடு, அவரை வெளியே போகும்படி எச்சரித்தார். இதில் ஆத்திரம் அடைந்த ஜான் ரோஸ், ஏற்கனவே மறைத்து எடுத்து வந்திருந்த ஆசிட்டை கிரிஜா மீது வீசினார்.
கிரிஜாவின் முகம், மார்பு மற்றும் வயிற்றுப்பகுதியில் ஆசிட் பட்டு எரிந்தது. கிரிஜா வலியால் அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் ஜான் ரோஸ் அங்கிருந்து தப்பியோடினார்.
அக்கம் பக்கத்தினர் கிரிஜாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிரிஜாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகிறார்கள்.
இதற்கிடையே கிரிஜா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியோடிய ஜான் ரோஸ் அருகில் உள்ள தோப்புக்கு சென்றார். அங்கு அவர் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் ஜான் ரோசின் உடலை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஜான் ரோஸ் உடல் பிரேத பரிசோதனை குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.
தற்கொலை செய்த ஜான் ரோஸ் உடல் கிடந்த இடத்தில் அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய பொருள்கள் கிடந்தன. அவற்றை போலீசார் கண்டெடுத்தனர்.
அதே நேரம் ஜான் ரோஸ் பயன்படுத்திய செல்போனை காணவில்லை. அது மாயமாகி இருந்தது. அந்த செல்போனில் அவரும், கிரிஜாவும் எடுத்து கொண்ட பல்வேறு படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் தொடர்பான பல தகவல்களையும் அதில் ஜான் ரோஸ் பதிவு செய்து வைத்திருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்து உள்ளனர். எனவே அந்த செல்போனை கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக திருவட்டார் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் ஜான் ரோஸ் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
ஜான் ரோசின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே உள்ள ஏற்றக்கோடு வியன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கிரிஜா (வயது 39). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மணிகண்டன் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அவரது மனைவி கிரிஜாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான ஜான்ரோஸ் (29) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர்.
இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சொந்த ஊருக்கு வந்தார். இங்கு அவர் திடீரென மரணம் அடைந்தார்.
அதன் பிறகும் கிரிஜாவுக்கும், ஜான் ரோசுக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு நீடித்தது. கணவர் இறந்து விட்டதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கிரிஜாவை ஜான்ரோஸ் வற்புறுத்தினார். ஆனால் தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதால் அவர்கள் நலனுக்காக தான் 2-வது திருமணம் செய்ய விரும்பவில்லை என கிரிஜா தெரிவித்தார்.
ஆனால் ஜான்ரோஸ் திருமணத்துக்கு தொடர்ந்து வற்புறுத்தி கிரிஜாவிடம் தகராறில் ஈடுபட்டார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட தகராறு முற்றியதில் ஜான்ரோஸ், கிரிஜாவை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பாக கிரிஜா திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ஜான்ரோஸ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த பிரச்சினைக்கு பிறகு சில காலம் கிரிஜாவை ஜான்ரோஸ் சந்திக்காமல் இருந்தார். கடந்த சில நாட்களாக மீண்டும் கிரிஜாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தினார். கிரிஜா மீண்டும் மறுப்பு தெரிவிக்கவே அவர் மீது ஜான்ரோஸ் ஆத்திரம் கொண்டார்.
நேற்று இரவு கிரிஜா தனது குழந்தைகளுடன் பக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது மறைந்திருந்த ஜான்ரோஸ், ரப்பர் பால் உறைய வைக்க பயன்படுத்தப்படும் ஆசிட்டை எடுத்து கிரிஜாவின் முகத்தில் வீசினார். இதில் கிரிஜாவின் முகம் கருகி வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். இதையடுத்து ஜான்ரோஸ் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
கிரிஜாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் கிரிஜாவை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆசிட் வீசியதில் கிரிஜாவின் 2 கண்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிட் வீசிய ஜான்ரோசை தேடினர். அப்போது அவர் அங்குள்ள தோட்டம் ஒன்றில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்ரோஸ் இறந்தார். திருமணத்துக்கு வற்புறுத்தி பெண் மீது ஆசிட் வீசிய வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை சுமார் 60 சதவிகிதம் முன்னிலை பெற்று விளங்குகிறது. இன்று மாலை 4 மணி வரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 982 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
பாஜக 927 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. இந்நிலையில், தும்குர் பகுதியில் வெற்றி பெற்ற இனாயத்துல்லா கான் என்ற காங்கிரஸ் வேட்பாளரின் வெற்றி கொண்டாட்டத்தில் மர்ம நபர்கள் ஆசிட் வீசினர்.
இந்த ஆசிட் வீச்சில் இனாயத்துல்லாவின் ஆதரவாளர்கள் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #KarnatakaLocalBodyElections
ஒருதலைக் காதல், காதல் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், கொலை செய்ய முயற்சிப்பதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, மனம் தளராமல் வாழ்பவர்களுக்கு பீகார் அரசு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கி வருகிறது. இதேபோல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 லட்ச ரூபாய் இனி நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்கும் குறைவானவர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையான 7 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக 50 சதவிகிதம் அதாவது, 10.5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பீகார் அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Bihar
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்